சோறு திங்க நேரமில்லே

சோறு திங்க நேரமில்லே!
வண்டியோட்டும் சுப்பனுக்கோ
-------வாய்க்கு ருசியா சோறில்லே!
வண்டிநிறைய பணமிருப்போர்க்கு
-------சோறு திங்க நேரமில்லே!
கண்ணு தெரிஞ்ச மனுசனுக்கோ
------காட்சிகள் இரசிக்க தோணலே!
கண்ணு தெரியா பேர்களுக்கோ
------காட்சிகள் தெரிய வழியில்லே!
விண்ணுமுட்ட மாளிகைவாசி
-------வியர்வைசிந்த விரும்பலே!
மண்ணுலதான் உழைப்போருக்கு
-------மண்ணுகூட சொந்தமில்லே!
--- கே. அசோகன்