பெண் விடுதலையும் ஆணாதிக்கமும் நடைமுறைச்சிக்கல்களும்
இஸ்லாமிய பெண்களை கூடுதல் கட்டாயப்படுத்தி புர்கா அணியச் செய்துள்ளதையும் ( பள்ளி மற்றும் கல்லூரிகள் இப்போது அதிக கெடுபிடி),
கோவில்களில் பெண்களை சேலை மற்றும் துப்பட்டாவை கண்டிசன் போட்டு அணியச்சொல்வதையும் பார்க்கும்போது,
மதங்களின் வேர்கள் இத்துப்போக ஆரம்பித்திருப்பது தெரியவருகிறது. அதனால் இப்போது பெண்களின் ஆடைகள் மீது அதிக கட்டளைகளை சுமத்தி அவர்களை மதத்திற்கு ஆப்பார்பட்டு சிந்திக்க விடாமல் அடிமையாகவே வைக்க முற்படுகின்றனர்.
பெண்களின் உரிமையையும் விருப்பத்தையும் கேட்காமலே ஆணாதிக்க வர்க்கம் கட்டளைகளை நீட்டுகிறது.
இதிலிருந்து வெளியே வரவேண்டும் என்றால் அவர்களின் மதத்தை தூக்கி நிறுத்தும் நிறுவனங்களில் படிக்ககூடாது, மாற்று பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ பயில வேண்டும்.
பெண்களின் விடுதலை உணர்வை ஆணின் காலில் எதிர்பார்க்காமல் இருப்பதே பெண்களின் முக்கியான உரிமையாகும்.
சிந்தியுங்கள்!!