அர்த்தம்

அவ்வப்போது சில
சின்ன சின்ன திருட்டுகள்
..அப்புறம் கொஞ்சம் பெரிதாக..
வீட்டிலேயே..தான்..
அடி மேல் அடி
விடுதலை ஒரு இரவில்
வெளிப்போந்தவன்
சைக்கிள் ரிப்பேர் கடை..
மளிகைக் கடை ..
பால் பூத்..என்று பார்த்து
சலித்து பின் ரிக் ஷா வண்டி
ஓட்டி, டாஸ்மாக்கும் குடித்தனமுமாய்
அபலை ஒருத்திக்கு புருஷனாகி
அவள் குழந்தைக்கு தகப்பனாகி
கொஞ்ச நாளில் தனியனாகி
நோயின் தாக்கத்தில் ..
தானும் இறந்து போக நினைத்த
காலையில் அவன் பெண்
டீச்சர் ஆகி விட்டாள்..
என்ற செய்தி ..வந்தது !
அவன் வாழ்க்கைக்கும்
அர்த்தம் இருந்தது என்றுதான்
இப்போது எல்லோரும் சொல்கிறார்கள்!

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (7-Jan-16, 9:30 am)
Tanglish : artham
பார்வை : 108

மேலே