கொடை
பிரம்மனின் ஈகை
பிரபஞ்ச இருப்பு
வருணனின் ஈகை
மழையின் திளைப்பு
வாயுவின் ஈகை
உலகின் நிலைப்பு
சூரியனின் ஈகை
இருளின் கலைப்பு
உழவனின் ஈகை
உயிர்களின் இருப்பு
அன்னையின் ஈகை
குழந்தையின் பிறப்பு
தந்தையின் ஈகை
தனயனின் வளர்ப்பு
ஆசானின் ஈகை
அறிவாளன் சிறப்பு
இயற்கையின் ஈகை
பூக்களின் சிரிப்பு
இளமையின் ஈகை
முதுமையின் வியப்பு
கர்ணனின் ஈகை
காவியத்தில் திகைப்பு
வள்ளலின் ஈகை
வறுமையின் ஒழிப்பு
குருதியின் ஈகை
குற்றுயிர் பிழைப்பு
உறுப்புக்களீகை
உன்னுயிரின் மீள் நிலைப்பு
மொழியின் ஈகை
செந்தமிழின் இருப்பு .
- பிரியத்தமிழ் -