காதல் தோல்வி
காதலித்தவந்ததென் ..!
நான்-
காதலை காதலித்தவன்..!
உணவுக்கு பதிலாய் உண்டவன்..!
காதலுக்காகவே வாழ்ந்தவன்..!
காதலையே சுவாசித்தவன்..!
யார் கண்பட்டதோ தெரியவில்லை..
படைத்தவன் கூட பொறுக்கவில்லை..
பறித்துவிட்டான் பாதியிலே..!
அவள் நிலவோடு நிழலானாள்..
நான் உயிரோடு ஜடமானேன்..!
என்காதல் குறைப்பிரசவமாய்
கலைந்துபோக..
மண்ணுக்கு தின்னக்கொடுத்துவிட்டேன்..!
என்காதலின் உருவம்
இல்லாதுபோயிருக்கலாம்....
என்காதல்
இன்னும் என்னுள்தான் இருக்கிறது..!
வலிமை பெற்று,
முழுமை பெற்று,
அதனால்தான்-
நான் இன்னும் உயிரோடிருக்கிறேன்..!