தலைப்பு செய்தி

*தலைப்பு செய்தி*
இன்றைய தலைப்பு செய்தி... நீண்ட நெடுங்காலமாக பாட்டி சுட்ட வடையை திருடி வந்த காக்கை இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் .
கொழுப்பு நிறைந்த எண்ணெயை உபயோக படுத்தி வடையை பாட்டி சுட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸ் விசாரணை .
பயன்படுத்திய எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதாக எதிர் கட்சிகள் சி பி ஜ விசாரணை கோரி போராட்டம் .
பாட்டி வடைசுட்ட கதையை இனி எப்படி சொல்லப் போகிறோம்- என்ற குழப்பதில் மக்கள் பரிதவிப்பு .
நிகழ்நிலை அறிக்கை:
எல்லா சேனல்களிலும் இதே செய்தியே ஒளிபரப்பாகி கொண்டு இருப்பதால்.. வேறெதும் கார்டூண் சேனலை பார்க்கவும்.
நன்றி வணக்கம்ம்ம்ம்

எழுதியவர் : Moorthi (7-Jan-16, 12:50 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : thalaippu seithi
பார்வை : 178

சிறந்த நகைச்சுவைகள்

மேலே