கவிதைபோல் கதை - 1 -திருமூர்த்தி

நிசப்தத்தை நிறுத்தி வைத்து
நிதானமாய் உலவிக்கொண்டிருந்தது
ஜீவராசிகளின் ரீங்கார மொழிகள்...

அடர்ந்த அந்த இருள்
அணைந்து ஜீவன்களுக்கும்
வானத்தில் வைரத்தை விதைத்திருந்தது...

சர்க்கரைத் துகள்களை
சேகரித்துக்கொண்டு தாமதமாய்ச்
செல்லும் செவ்வெறும்பு...

மெல்லிய தளிர்மீது
மெதுவாக இறக்கி வைத்துவிட்டு
தாகத்தை நனைக்க
தண்ணீர் தேடியது...

ஈரமான இரவுத்தென்றல்
இ-மெயில் பரப்பியது காற்றில்...

தண்ணீர் தங்கி இருக்கும்
ஊர்தேடி ஊர்ந்துசென்றது...

தாகத்தின் வேகம்
தண்ணீர் இருக்கும்-அந்தக்
குளத்தங்கரைக்கு
அழைத்துச் சென்றது...

அதோ..! அதோ..!
தண்ணீர் ...!

தாகத்தில் தொலைந்த தன்னை
மெல்ல மெல்லத
தண்ணீரைப் பருக
தயார்ப்படுத்தியது ...


வாசித்துக்கொண்டிருக்கும்
கவிமான்களே சற்றே கேளுங்கள்..!
செவ்வெறும்பு செப்புவதை ...

தண்ணீரைச் சுவைத்துவிட்டு
"ஆகா ..!
தீம்புனல் திரண்டு
தித்திப்பை திரட்டுகிறது ..!
நீர்வாழ் உயிரினங்களே ...
நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் ..!

இவ்வளவு இனிக்கிறதே ..
வானத்திலிருந்து
தேநூற்றுகிறதோ
இந்தக்குளத்திற்கு ..!"


"அமுதம் பருகிய
அழகிய எறும்பே ...
அதோ..!
அந்த வெண்ணிலவில்
இருந்துதான்
இந்தக் குளத்திற்கு
தேனமுதம் ஊற்றுகிறது..."
என்று
தவளைகள் ஜாலமிட்டன...

###################################################################

க(வி)தை தொடரும் ...!

எழுதியவர் : திருமூர்த்தி (8-Jan-16, 1:48 pm)
பார்வை : 76

மேலே