அஸ்தமனம்

எந்தவித
எதிர்பார்ப்பும் இல்லாமல்
சாதரண வாழ்வில்
அன்பிருந்த போதும்
என வந்தவளுக்கு வரிசையாக
ஏமாற்றங்கள்!

உன்னை வழிந்துருகி
காதலித்தவன் உனக்காக
செடில்குத்தி காவடி எடுத்தவன்
ஒரு இனவெறி இடம்பெயர்வில்
காதலை சொல்லாமல்
துலைந்துபோய்!

காலம் புரட்டிப்போட்ட
ஒரு மழைநாளில்
மீண்டும் ஒருமுறை உன்னை
பார்த்தபோது!

வெகுளித்தனமும் குறும்பும்
தோலைத்து
ஒரு இயல்பு நிலையை
பலவந்தமாக
இழத்து பிடித்து உன்னுள்
வைத்திருந்தாய்!

இவை உனக்கு ஒத்துவரவில்லை""
ஏன் இப்படி? என்று கேட்டதற்கு

இப்பவந்து கேட்கிறாய்
எங்கு போயிருந்தாய்?
என்னைவிட்டு"""
ஆசைப்பட்ட வாழ்க்கையும்
கிடைக்கவில்லை!!
கிடைத்த வாழ்க்கையும்
சரியா அமையவில்லை!!
எல்லாம் விதி""
என்றாள்!

சந்தர்ப்பங்களை தவறவிட்ட
காலஓட்டத்தில்
தேடிஅழைய மனமிருந்தும்
துரத்தப்பட்ட இனசுத்திகரிப்பில்

உனது இழப்பு எவ்வளவு
கொடியது!
உனது நினைவுளுடன்""'
ஒரு பொய் வாழ்க்கை
வாழ்கிறேன் என்று
எப்படி சொல்வேன்
அவளுக்கு!

மழை நீர் விழந்து
மௌனம் கலைந்தபோது
எங்கள் இருவரின்
கண்ணீரில் ஒற்றுமை
தெரிந்தது!

லவன் டென்மார்க்

எழுதியவர் : லவன் (8-Jan-16, 10:25 pm)
பார்வை : 105

மேலே