வாழ்கை எனும் ஓடம்

மெல்ல வந்த வெள்ளம்
ஓட தொடங்கிய ஓடம் !
ஒவ்வோர் சந்திப்பிலும் ஒற்றை
ஒற்றையாய் ஆட்கள் ஏற !
ஓடத்தில் ஓட்டை இட்டு
இறங்கிய ஆட்கள் எத்தனையோ !
புதிதாய் வந்தவனை ஓரமாக்கி
என்றோ ஓட்டை இட்டு இறங்கியவர்களை
எண்ணி நித்தம் நித்தம் பயணிக்கும்
என் வாழ்க்கை எனும் ஓடம்