ஈசல்

இறகிரண்டும்
இழந்து
இயலாமையால் நடந்தேன்
இரவே
இரக்கமின்றி நீ செல்ல
இறந்தேன்...

குழியில் பிறந்து
தனியாய் பறந்து
தரையில் தவழ்ந்து
விளக்கில் அணைந்து
இரையாய் விழுந்தேன்
இரவு இறுதியில்..

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (8-Jan-16, 11:14 pm)
பார்வை : 85

மேலே