காதல் மயக்கம்
இதழ் குவித்து
கண்ணடித்து நீ
செல்ஃபிக்கு போஸ் கொடுக்கையில்...
பிறக்கிறது ஆயிரமாயிரம்
புகைப்பட ஹைக்கூக்கள்...
------
நான் ரசித்த கவிதையெல்லாம்
ஒன்று திரட்டி உருவம் கொடுத்தால்...
அதன் மொத்த உருவம் நீயே தான்..
------
என் பின்மதிய நேரங்களில்
'சாப்டியா டா' என
குறுஞ்செய்தி வருகையில்..
உண்ட மயக்கத்தோடு
உன் காதல் மயக்கமும்...
------
என்னுளிருக்கும்
உன்னை எழுப்பினேன்
என்னுறக்கம் பாழாய் போனது...
------
உனக்கு நான் வைத்த
விரல் மருதாணையில்
நம் காதல் பழுத்திருக்கிறது...
------
என் கனவிற்கு காத்திருக்கும்
உன் உறக்கத்திற்கு சொல்லடி
ஒரு குட் நைட்...
------