நீ என் கைபிடிக்கும் நாள்

உன் கை பிடித்திடும் நாள்
வெகு அருகில்...,
நீ எங்கோ,
நான் எங்கோ...,,- என்ற
இடைவெளிகள்
குறையும் அந்த நேரம்
கண்ணுக்கெட்டிய தூரமதில்..!

'திருமணம்' - என்றே
மற்றவர் சொல்ல
அந்த பெயரிலெ(ல்)லாம் - இல்லை
அக்கறை எனக்கும் - ஆயிரம்
பெயர்கொண்டு அழைக்கட்டுமே,
அவர்கள் அந்நாளை!,,
எனக்கோ,..
என் பிறப்பின் அர்த்தம்
காணும் நாள்...
என் இதயம் தொலைத்த
முகவரி கிடைக்கும் நாள்..
நீயென் கைபிடிக்கும் நாள்!..

இன்று போல்,,, - நீ
எந்தன் விழிகளுள் விழுந்த
அந்த முதல் நாழிகை..
என் இதயம் நுழைந்து
தூக்கம் பறித்து சென்ற
அந்த முதல் நாள்...
அன்றிலிருந்து நீயே
எந்தன் எண்ணங்களின் நாயகன்..

தொலைபேசி வழி கேட்டிட்ட
உன் குரல் - இனி என்றுமே
அருகே ஒலிக்கும்...
தொலைவிலிருந்து - தினம்
நீ சொன்ன கதைகள்
இனி எப்பொழுதும்
உன் தோள் சாய்ந்து
கேட்டிடும் வரம் வாய்க்கும்...
என்ன தவம் செய்தேன்,
உன்னை என்னவனாய் பெற..!

உள்ளுக்குள் பேரின்பம்,
ஆசையும் பதற்றமும்
போட்டியிட்டு தடுமாறி..,
இன்று ஜெயிக்க சொல்லுது
நம் காதலை.!
இனி 'நாம்' என்ற இருவர் எதற்கு?,
சுருக்கி கொள்கிறேன் 'நான்' என்றே
உன்னையும் என்னோடு சேர்த்து!!!

உன் வருகை காத்திருக்கும்
இவள் உயிர் என்றும்!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (9-Jan-16, 12:08 pm)
பார்வை : 878

மேலே