வானப்பெண்ணே
நீலவானே நீளவானே
நீயும் பெண்ணும் ஒன்றல்லோ!
வெள்ளைபெண்ணே வெள்ளைபெண்ணே
நீயும் வானும் இரண்டல்லோ
இரண்டும் ஒன்றல்லோ!!
மேகக் கண்ணால் வானம் பார்த்தால்
பூமியில் மழைதான் பொழியாதோ?
உன் கருமை விழியால் ஆண்களை
பார்த்தால் ஆண் மனதில்
மழைதான் பொழியாதோ!!?
நீயும் வானும் இரண்டல்லோ
இரண்டும் ஒன்றல்லோ!!
வானை சுற்றி நட்சத்திரக்கூட்டம்
இருப்பது எவ்வளவு அழகாகும்!!
அதுபோல், உன்னை சுற்றி இருக்கும்
பட்டில் சொலிக்கும்
நட்சத்திரக் கல்லும் உலகைவிடவும்
அழகாகும்!!
நீயும் வானும் இரண்டல்லோ
இரண்டும் ஒன்றல்லோ!!
பரந்து கிடக்கும் வானிலே
எல்லை எவர் தான் கண்டதுண்டு?
பெண் மனதின் எல்லை
எதுவரை என்று எவர்தான்
இங்கே கண்டதுண்டு?!
நீயும் வானும் இரண்டல்லோ
இரண்டும் ஒன்றல்லோ!!
மெல்ல இருளும் வானில்
ஒற்றை நிலவு வான்
அழகை இன்னும் மேம்படுத்தும்!!
சோக இருளில் முகத்தில்
ஒற்றை சிவப்பு நிலவாய் உன்
உதடுகள் இன்னும் உன்னை அலங்கரிக்கும்!!
நீயும் வானும் இரண்டல்லோ
இரண்டும் ஒன்றல்லோ!!
சோம்பல் முறிக்கும் சிவப்பு
வானம் இயற்கையின்
அழகில் சரிபாதி!
சோம்பலில் சிவக்கும் உன்
முகமும் பூமியின் கணக்கில்
ஒரு கோடி!!
நீயும் வானும் இரண்டல்லோ
இரண்டும் ஒன்றல்லோ!!
நிலத்துக்கும், வானுக்கும்
ஒற்றை இணைப்பு
அது காதல்மழை!!!
உன் மனதுக்கும்,என் மனதுக்கும்
ஒற்றை இணைப்பு
அது காதல்வலை!!
நீயும் வானும் இரண்டல்லோ
இரண்டும் ஒன்றல்லோ!