படிப்போம் நாம் படிப்போம்

படிப்போம் நாம் படிப்போம்
பண்புதரும் நூலை - அதை
படித்துப் படித்துப் பருகிடுவோம்
பகுத்தறி வெனும் பாலை

தினம் தினமே படித்திடுவோம்
திருக்குறள் என்ற நூலை - அது
தெளிவான அறிவை தரும்
தெள்ளுத் தமிழ் சோலை

கம்பர் தந்த காவியத்தை
கனிவுடனே படிப்போம் - அதில்
கூறியுள்ள நேறிகளை நாம்
குன்றாமல் கடை பிடிப்போம்

அவ்வை தந்த அறநெறியாம்
ஆத்திச்சூடிப் படிப்போம் - அவர்
வகுத்துத் தந்த வழிசென்று
வாழ்வில் அழகை வடிப்போம்

மலைபோன்ற துன்பம் வந்து
மயக்கம் கொள்ளும்போது - மன
கலக்கம் நீங்க மகாகவியின்
கவிதை நூலைப் படிப்போம்

புத்தகத்தை தினம் படித்தால்
புத்திக்கு பலம்கிடைக்கும் - பல
புத்தம்புது கருத்தை அளித்து
புத்துணர்வு தினம் கொடுக்கும்

புத்தன்ஏசு காந்தி போன்ற
புனிதர் பற்றிஅறிய - அந்த
துரியோதனன் சகுனி போன்ற
துஷ்டர் செயலும் புரிய

புரட்சிக்கவி பாரதி தாசன்
புரட்சிக் கருத்துதெரிய - நம்
தேசத்திற்கு தன்னைத் தந்த
தியாகிகள் பற்றி அறிய

புத்தகம் படிக்கும் பழக்கமே
புகுத்தும் புதியசெய்தி - நாம்
நித்தம் படிக்கும் பழக்கமே
நினைவை பெருக்கும் உறுதி.

எழுதியவர்
பாவலர்.பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (9-Jan-16, 9:11 pm)
பார்வை : 66

மேலே