தெரியாமல் போனது ஏனோ
நியூமராலஜி முறையில்
பெயரை மாற்றினால்
அதிஷ்டம் வரும் என தெரியும்
வாஸ்து முறையில்
வீட்டை மாற்றினால்
அதிஷ்டம் வரும் என தெரியும்
ராசிக்கேற்ற கற்கள்
அணிந்தால்
அதிஷ்டம் வரும் என தெரியும்
உழைத்தால் உயர்வு வரும்
என்பது மட்டும்
தெரியாமல் போனது ஏனோ?