பிரம்மனின் சாதனை நீ

ஆயுதங்கள் எதற்கிங்கே?...
உன்னை காத்திடத்தோதாய்
பல படை தகர்த்திடும்
இரு கூர் விழிகள் உனக்கிருக்க!
-----------------------------------------------------
எதற்கு இதனை அலங்காரம்?....
உன் மத்தாப்பூ சிரிப்பிலே
மதம் கொண்டு அலையுதம்மா
இவன் மனமெனும் களிறு!
-----------------------------------------------------
கொடியிடை பெண்ணே
கொஞ்சம் திரும்பி பார்த்து செல்...
உன் பொடிநடை வழியே
இவன் சுவடுகள் காணும்!
-----------------------------------------------------
இரவுகள் இல்லை - இவன்
வாழ்வில் இனி என்றும்,
உன் ஒற்றை மூக்குத்தி வழியே
உயிர் பெரும் புது கதிரவன் இங்கே!
-----------------------------------------------------
நீ தலை சாய்த்து பார்த்திட்ட
அந்த பத்து பாகை சரிவிலே
இன்று வரை என் இதயம்
நிலைகுத்தி நிற்குதம்மா!
----------------------------------------------------
ஒற்றை வார்த்தை கூட
நீ செப்பியது கிடையாது- இருந்தும்
ஒலிக்கின்றது - உன் குரல்
ஓயாமல் செவிகளிலே!
----------------------------------------------------
என் தோட்டத்து மலர்களெல்லாம்
பதுங்குகின்றன முகம் மறைத்து,
உன் அழகோடு போட்டியிட
விண்ணப்பங்கள் கோருகையில்!
---------------------------------------------------
பிரம்மனுக்கு எதற்கம்மா
இத்தனை ஓரவஞ்சனை,
அவன் சாதனையின் சான்றுக்கு
மொத்தம் நீ ஒருத்தி மட்டுமே!
---------------------------------------------------
---------------------------------------------------
---------------------------------------------------

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (10-Jan-16, 9:58 am)
பார்வை : 1757

மேலே