வாலியின் கஜல்

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக

நேற்றையப் பொழுது கண்ணோடு இன்றையப் பொழுது கையோடு
நாளையப் பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு

ஊருக்கு துணையாய் நானிருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழி கண்களில் நெய் வார்த்தேன்

முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய படியே கொடுக்க வந்தேன்

----வாலியின் மிக இனிய இலக்கிய சுவை மிக்க பாடல்

கஜல் வழியில் எழுதிப் பார்க்கிறேன் ---

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக ------------------------1

நேற்றையப் பொழுது கண்ணோடு இன்றையப் பொழுது கையோடு
நாளையப் பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் அழகாக-------------2

ஊருக்கு துணையாய் நானிருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழி கண்களில் நெய் வார்க்க--3
---இது இப்படி அமைந்தால் இன்னும் நன்று
ஊருக்கு துணையாய் நானிருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
மைவிழி கண்களில் நெய் வார்த்தேன் உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற--3

முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய படியே அதை கொடுக்க

கஜல் ஆர்வலர்கள் கவனிக்க :

முதல் கண்ணி அல்லது ஆரம்ப வரிகள் ஈற்று சொல் ஒரே ஓசையில்
இயந்து ஒலிக்க வேண்டும். இங்கே பெண்ணாக அழகாக --- அகர ஓசை இயைந்து ஒலிக்கிறது
இந்த அகர ஓசை இரண்டாவது வரியில் கவிதை முழுக்க பயின்று வரவேண்டும்
வருகிறது
கஜல் வழியிலும் வாலியின் பாடல் நிரம்பவே நியாயம் செய்கிறது .

வாலியை காலிப் (GHALIB ) ஆக்கிவிட்டேன்

வாலி அண்ணா கோவிச்சுக்கலையே மகிழ்ச்சி தானே ?

-----கவின் சாரலன்

எழுதியவர் : வாலி கஜல் (10-Jan-16, 4:21 pm)
Tanglish : vaaliyin kajal
பார்வை : 211

மேலே