விழிகளில் ஒரு கவிதை

நினைவுச் சிறகுகளில் பறக்கிறேனடி
நினைவு அலைவுகளில் நீந்துகிறேனடி

நினைவு பொக்கிஷங்களை சுமக்கிறேனடி
நினைவுகளில் நாட்களை நகர்த்துகிறேனடி

விழிகளில் நீ வாசித்து சென்ற காதல்
நாசிகளில் இசையாய் சுவாசித்தேனடி

இதழ்களில் நீ வீசிய புன்னகையில் என்
இதழ்களில் காதல் ஒலித்ததடி

கண்களில் கவிதை வாசிக்கிறாய்
இதழ்களில் ஓவியம் தீட்டுகிறாய்

முக ஒளியில் மின்னல் வெட்டுகிறாய்
முன்னால் வந்தால் மறைந்து போகிறாய்

கயிறாக எனை கட்டி ஊஞ்சல் ஆடுகிறாய்
கண்ணுக்குள் உட்கார்ந்து பல்லாங்குழி ஆடுகிறாய்

நினைவுகளிில் இசைக்காமல் கண்ணே
தோன்றிவிடு என் கண் முன்னே

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (10-Jan-16, 5:34 pm)
பார்வை : 101

மேலே