இனி ஒரு விதி செய்வோம்

விதியின் மேல் பழி போடுகிறாய்;
விட்டத்தின் மேல் விழி போடுகிறாய் !
விரக்தியில் பேசுகிறாய்;
விவரமின்றி பிதற்றுகிறாய் !

எத்தனை நாள் இப்படி ?
ஏன் இந்த கோலம் ?

உன் படுக்கையில்
பயங்கரவாதம் எழுகிறது !
படுத்தது போதும்
எதிர்த்திடு !

உணர்ச்சியை ஓரங்கட்டு !
உரிமையை நிலை நாட்டு !

தனி ஒருவன் நீ அல்ல !
தலை மகனாய் நீ இரு !
தலைமை காத்துக்கிடக்கு
தயங்காமல் தடைகளை அகற்று !

கலவரம் விதைக்கும்
கயவர்களை;
கருணையின்றி
கரித்திடு !
காவலாய் நான் இருக்கேன் !
கவலை வேண்டாம் உனக்கு

பகைமை அகற்றி ;
பசுமை செழிக்க ;
இனி ஒரு விதி செய்வோம் அதை
எந்த நாளும் காப்போம் !

எழுதியவர் : hajamohinudeen (10-Jan-16, 6:14 pm)
பார்வை : 1894

மேலே