வாழ்க்கையின் தேவை - உதயா
![](https://eluthu.com/images/loading.gif)
விசாலமான என் வீட்டில்
என் வசிப்பு நேரம் மட்டும்
வெகுக் குறைவு .....
அந்த மழைக்காலத்தில்
வானில் தோன்றும்
ஏழுவண்ண வில்லைப் போல
காலத்தின் சுழற்சியை
நொடிக்கணக்கில் சுருக்கிவிட்டு
நான் இயந்திரத்தை மிஞ்சிவிட்டேன் ...
என் வாழ்க்கை சுழர்ச்சியோடு
சுழன்று போவதில்
என் மகளுக்கும் மகனுக்கும்
சொத்துகளை சேர்க்க
நான் ஓடியதால்
என் அன்பும் அரவணைப்பு
அவர்களில் சொப்பனத்தில் கூட
அணைத்துக்கொள்ள மறுக்கிறதாம்
தேவைக்காக தொடர்ந்த பயணத்தில்
தேவை மட்டும் தொலைந்துக் கிடந்தது
என் மக்களின் ஏக்கத்தில்
என் தேவை மட்டும் மிகுந்து கிடக்கிறது
நீண்ட நாட்களின் இடைவெளி முறிக்க
வீட்டோரம் பாதம் பதிக்க வந்தபோது..
என் மகளும் மகனும் என்னை அணைத்துக் கொண்ட
அணைப்பும் இறுக்கமும் நீண்டு கொண்டே இருந்தது
அப்பா இன்று மட்டும் எங்களோடு
உண்ணுங்களேன் உறங்குகளேன் என்று
அவர்களின் கலங்கிய கண்களோடு உதிந்த
வார்த்தைகளின் வழியே வழிந்தோடியது
தேவையும் தேவையின் விளக்கமும்