விலகி போனவனே உமக்கு நன்றியடா

பயணிக்கும் இடமெல்லாம்
கல்லூரி ஆலயமென
அங்கும் இங்கும் எங்கு
பார்த்தாலும் காதல் இளஞ்சோடிகள்
அவர்கள் அளித்ததோ என்னவோ
அறியாமலே இவளுக்குள்ளும்
உண்டாயிற்று ஓர் தாக்கம்..........

சுற்றி திரிந்து சுற்றம் மறந்து இங்கு
செல்லிடைப்பேசியில் உறவாடும்
உருவங்கள் நித்தம் நித்தம் தென்பட
இவளுக்குள் தென்பட்டவையெல்லாம்
ஏதோ இவளரியாதொரு ஏக்கம்..........

இல்லத்தின் இன்னல்கள் ஒருபுறம் தென்பட
இதயத்தின் ஏக்கங்கள் மறுபுறம் மன்றாட
அகிலத்தின் காட்சிகள் இவளுள் நிலைபெற
அன்னிலையில் கண்டேன் என்னவனே ! ஆம்......
உன்னை அக்கணம் கண்டேன் என்னவனே !!

நான் காணும் உனது விழிகளின் ஏக்கம்
இன்னால்வரை இவள் கொண்ட ஏக்கம்தானோ !
உந்தன் இதயத்தின் தாக்கம் இவ்வகிலம்
இவளுள் புகுத்திய மோகம் தானோ !

இதழ்விரித்து எடுத்துரைக்கும் முன்பே
அறிமுகமானதன் ஆர்ப்பரியமோ
இதயத்தின் மின்னல்வேக துடிப்புகள்
ஏனோ நிலைகுலைக்கின்றது
இவளது இளமையை உரசியவாறு........

பேச்சில் வார்த்தை சாலம் கொண்டு சாய்த்துவிட
உன்னைவிடவும் வேறொருவன் இவ்வகிலத்தில் உண்டோ !...........

என்னைப் பற்றி ஏதேதோ சிந்திந்தேன் ஆயினும்
இறங்கிவந்தேன் உன்னையே பற்றியதால் !!..........

ஏனடா ?..........

எதிர்பாராவண்ணம் உனக்கும்
எனக்குமாய் ஏனிந்த இடைவெளி..........
கரம்பிடித்து உந்தன் பின்னே
வந்தவளின் இவளுக்கு முன்பாகவே
நீ பின்வாங்கி போவதுதான் ஏனோ ?.......

என்சொல்வேன் !........... என்சொல்வேன் !!.........

என்னவனே !!........

காதலின் வரையறை எதுவாகவும்
இருந்துவிட்டு போகட்டும்............
காரணம் ஏதுமின்றி இவள்
வாழ்வே நீயென வந்தவளை
காரணங்கள் பல கூறியும்
கூறாமலும் மறுத்துவிட்டு
போன மாயம் என்ன.........

உந்தன் கபட உணர்வுகளால்
உன்னால் ஒதுக்கப்பட்ட இவள் –நீ
செய்வதற்கரியாது விலகி போவதையும்
ஏகமானதாக ஏற்கிறாள் இன்று........

அறிவாயோ !........

காதல் பொருளரியா உள்ளத்தின்
மோகமெல்லாம் காதலாகி விடுமோ ?!.......

கலியுக காலத்து உறவுகளில்
காண்பதெல்லாம் காதலாகிப் போகுமோ !!.........

இல்லையெனில் !!.........

காதல் !............. காதல் !!........... என
உரைப்பதெல்லாம் காதலாகக் கூடுமோ !!!...........

இதனை எண்ணி பார்ப்போர்
இங்கு எத்தனைபேர் உள்ளார் ?.......

உடலும் உள்ளமும் இருதிசை செல்ல
உனக்காக நானும் எனக்காக நீயுமென
வார்த்தையில் வாழ்ந்து கொண்டிருப்பதை
காட்டிலும் காதலெனும் நாமம் கொண்டு
காதலுக்கு இழுக்கு அளிக்காதிருக்க என்னை
விலகிப் போனவனே உமக்கு நன்றி கூற
கடமைகொண்டேன் ஆகவே உமக்கு நன்றியடா !!!!!!!........


*************************************தஞ்சை குணா******************************

எழுதியவர் : மு. குணசேகரன் (11-Jan-16, 10:25 am)
பார்வை : 889

மேலே