நீ கொடுத்த வலி பொக்கிஷமடி எனக்கு 555

என்னவளே...
நீயும் நானும் பார்த்து கொள்ளவில்லை
அறிமுகபடுத்திகொண்டோம்...
என் தோழி உன் தோழி
என்பதால் கைபேசியில்...
நாம் முதன் முதலில் பேசிகொண்ட
போது வார்த்தைகள் வரவில்லை...
நீ உதிர்த்த வார்த்தைகளை
கவிதையாக வர்ணித்தேன்...
முதன் முதலில் நாம் பேசியபோது
அது நம் உறவு என்று தெரியவில்லை...
பார்க்காத காதல் போல்
கைபேசியில் ஒரு காதல்...
நம் காதல்...
நீயும் நானும் சந்தித்த அந்த முதல்
நாள்தான் நம் இறுதி சந்திப்பும்...
நீ கொடுத்த மௌனங்களை
வார்த்தையாக எழுதினேன்...
காகிதத்தில் அல்ல
என் இதயத்தில்...
ஆண்டுகள் சில கடந்துவிட்டது...
உன் நினைவும் அந்த
வலியும் சுகமாக என்னில்...
சில நேரங்களில் வந்து செல்கிறது
தினம் ஒருமுறையாவது...
இன்று நான் எவ்வளவு
இன்பமாக இருந்தாலும்...
முதன் முதலில் நீ எனக்கு
கொடுத்த இன்பமும் வலியும்...
பொக்கிஷம்தானடி என் வாழ்வில்
நான் மரணிக்கும்வரை.....