தமிழர் திருநாளாம் தை - பொங்கலோ பொங்கல்
தமிழர் திருநாளுக்கு,
பொங்கலோ பொங்கல் ..
பொய்க்கால் குதிரை ஊர்வலம்
வந்தனம் போடும் தெரு கூத்தும்
தலையாட்டும் வில்லுப்பாட்டு
தாளம் போடும் கரகாட்டம்
பந்தலிட்ட திருவிழாக்களில்
திறனை காட்டும் உரியடியும் சிலம்பாட்டமும்
விரட்டிப்பிடிக்கும் ஜல்லிக்கட்டு காளைகளை
நகரத்து வாசிகள் மறக்கின்ற வேளையில்
மளமளவென மண்பானை செய்ய
தேனிசைக்கும் கொட்டாங்குச்சி வாத்தியம்
வழிப்போக்கன் வாங்கி செல்ல
மீதமுள்ள மண்னை கலை பொம்மையாக்கும்
மண்னை நம்பும் விவசாய தொழில்
பஞ்சை நம்பும் ஆடைத்தொழில்
அன்பை காட்டும் ஆட்டு மாட்டுத்தொழில்
சுவையை பெருக்கும் கோழிப்பண்ணை
விட்டு நகரத்திற்கு நகரும் கிராமத்தார்கள்
காலப்போக்கில் வளரும் சந்ததியர்களிடம்
பொங்கல் என்றால்
சிற்றுண்டி என்பார்கள் போல !