குருடனின் நண்பன்

குருடனின் நண்பன்👀
***********************

பிறவிக் குருடன் ஒருவனுக்கு...
கண் சிகிச்சை...

இன்னும் இரண்டு நாளில்...
உன்...
கண் கட்ட அவிழ்த்திடுவோம்....!!

யார முதல்ல...
பார்க்கனும்னு ஆசைப்படுற...?

சொந்தம்னு சொல்லிக்க...
இருந்த இரண்டு பேரும்...
இப்ப...
சொர்க்கத்துல இருக்காங்க...!!!

இருந்தும் இன்று...
எனக்குன்னு ஒரு நண்பன் இருக்கான்...!

பாவம், அவனுக்கும்....
வாய் பேசவராது...!
காதும் கேட்காது...!!

ஆனா நான்...
அவன்கிட்ட மட்டும்தான்...
அதிகமா பேசுவேன்...

அவனுக்கு,
கண் தெரியுமான்னு....
எனக்கு தெரியல...!!

எங்க போகனும்னாலும்...
அவன் கையை பிடித்தபின் தான்...
என் கால்கள் நடக்க ஆரம்பிக்கும்...

அந்த அளவுக்கு...
அவன் மேல் நம்பிக்கை எனக்கு...!

இதுவரை
என் கண்ணுக்குத் அகப்படாமல்...
மறைந்து வாழும் இவ்வுலகை...
பார்ப்பதற்கு முன்...!

என் நண்பனை பார்க்கவேண்டும்...!!

"ஆமா உன் நண்பன்...
எங்க இருக்கான்..?"

இங்கதான்...
எனக்கு பக்கத்துலதான்...
எப்பவும் இருப்பான்...!!!

என்றவாறு..
எதையோ தேட ஆரம்பித்தான்...
தனது கைகளை தடவியபடி... !!!

என்னோட பை...
என்னோட பை...
எங்க டாக்டர்...

அது எங்கயும் போகல...
இங்க தான் இருக்கு...
என்ற மருத்துவரிடம்...

அதை திறந்து பாருங்க...
என்று,
பதில் அளித்த அடுத்த நொடி...

மருத்துவருக்கு அதிர்ச்சி...!!!

எந்த வித ஆரவாரமுமின்றி...
தன் உடம்பை மடக்கி...
அமைதியாக இருந்தான்...

அந்த நண்பன்...
குருடனின் கைத்தடியாக...!!!

"எனக்கு கண்ணு தெரிஞ்சதுக்கு...
அப்புறமா...

நான் அவன கடைசி வரைக்கும்...
பத்திரமா பாத்துக்குவேன் டாக்டர்..."

என் கண் கட்ட...
அவிழ்க்கும் வரை...!
அவன பத்திரமா...!!
பாத்துக்கோங்க டாக்டர்...!!!

இவண்
✒ க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (11-Jan-16, 9:19 pm)
பார்வை : 390

மேலே