பள்ளி வாழ்க்கை

பறவை கூட்டம் பிரியும் நேரம்
கவலை மேகம் சூழ்ந்து கொள்ளும்!

வருடங்களும் நிமிடங்களாகும் இந்த வயதில்
நிமிடங்களை வருடங்களாக்கத் துடிக்கும் மனது!!

பிரிவின் துயரம் தாங்காமல்
உயிரில் கரையும் உறவுகள்!

கண்ணீர் துளிகளோடு விடை பெற்றாலும்
நினைவுத் துளிகள் இருக்கும்
நெஞ்சின் ஓரம்
என்றும் இனிமையாய்!!

வாழ்க்கை எனும் ஒரு வழி பாதையின்
பள்ளி வாழ்க்கை எனும் எல்லையில்
நன்றி! என கூறத் தெரிந்த பலகைக்கு
மீண்டும் வருக ! என கூறத் தெரியவில்லையே!

நெருங்கிய நண்பன் கண்ணில் படும் போதும்
பள்ளி நினைவுகள் நெஞ்சைத் தொடும் போதும்
வானத்தின் முடிவே மகிழ்சியின் எல்லை!!

இயந்திரமாகவே மாறிவிட்ட இந்த மனமும்
உணர்ச்சிகளின் கூடமாகும் நேரம்!

என் பள்ளி வாழ்க்கைகாக சில வரிகள்
முடிவில் சில கண்ணீர்த் துளிகள்!!

எழுதியவர் : அறிவரசன் (12-Jan-16, 10:43 pm)
Tanglish : palli vaazhkkai
பார்வை : 4663

மேலே