பொங்கல் வாழ்த்து - குமார்

ஏழையின் வீட்டில்
பூனையை விரட்டி
பானையை அடுப்பேற்றிய
புதுப்பொங்கல்

இது
ஜல்லிக்கட்டை அறிவித்து
தடைபோட்டு கடுப்பேற்றி
திருப்பங்கள் தந்த
திருப்பொங்கல்

மாவிலைத் தோரணத்தை
மாடத்தில் மாலையாக்கிய
மாப்பொங்கல்

இது
மங்கையர் தோற்றத்தில்
மல்லிகையைச் சேலையாக்கிய
பூப்பொங்கல்

பழையன எரித்து
புதியன மரிக்கும்
தீப்பொங்கல்

இது ஏழைகளை
தையல் விட்ட ஆடைவிட்டு
நெய்யல் ஆடை அணியவைக்கும்
தைப்பொங்கல்

உழைப்பிற்கும் உழவனுக்கும்
பெருமைசேர்க்கும்
மெய்ப்பொங்கல்

இது
உமிழ்நீர் ஊற்றெடுத்து
நாவிற்கு இனிமை சேர்க்கும்
நெய்ப்பொங்கல்

மாட்டிற்கும் மதிப்புதந்து
தமிழர்களின் தனித்துவமாய்
தோணும் பொங்கல்

இது
பால் பொங்கி வழிந்தவுடன்
பாசம் பொங்கப் பணம் தரும்
காணும் பொங்கல்

கதிருக்கும் கதிர்வளர்த்த
கதிரவனுக்கும் படயலிடும்
இப்பொங்கல்

இருண்ட
உழவுக்கும் உழவனுக்கும்
ஒளிதந்து விடியலிடும்
எப்பொங்கல் ?

அனைத்துக் கவிஞர்களுக்கும்
என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
அன்புடன் குமார்

எழுதியவர் : குமார் (12-Jan-16, 11:13 pm)
பார்வை : 434

மேலே