பேசவும் வாய்ப்பளிப்போம்

வாக்காளப் பெருமக்களே எதிர் வரும் பொதுத் தேர்தலில் எங்கள் கட்சியின் ஒலிபெருக்கிச் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான இடங்களில் எங்கள் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால், கண்ட இடங்களில் பேனர் கட்டி இடையூறு செய்யமாட்டோம்.

அரசு வழங்கும் விலையிலாப் பொருள்கள்களில் எங்கள் முதல்வரின் படமோ பெயரோ இருக்காது. அவையெல்லாம் அவர் சொந்தச் செலவில் வழங்கப்படும் பொருள்களில் மட்டுமே அச்சிடப்படும். மாமன்ற உறுப்பினர்களுக்கு தேவைப்படும் போது மேசையைத் தட்டும் உரிமையுடன் மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் உரிமையையும் வழஙுகுவோம். எங்கள் முதல்வர் மக்களையும் நிருபர்களையும் அடிக்கடி சந்திப்பார்.அவர் காலில் விழுந்து வணங்கும் எங்கள் கட்சிக்காரர்களை
உடனடியாக கட்சியிலிருந்து நீக்கிவிடுவோம். இதுவே எங்கள் தேர்தல் வாக்குறுதியின் முதல் பட்டியல்

எழுதியவர் : மலர் (12-Jan-16, 10:56 am)
பார்வை : 81

மேலே