புதிராக உள்ளதடி புரியாத உலகத்தில் - - - சக்கரைவாசன்

புதிராக உள்ளதடி புரியாத உலகத்தில்
******************************************************************
நகர் மனைகள் விற்பனையாம் அகர்பத்தி விற்பதுபோல்
சுகர் நோய்க்கு மருத்துவரோ பல்லாயிரம் எண்ணிக்கை
புகார்க்கு துறையிருந்தும் தினார் க்கு வழிகோலாம்
நிகரில்லா வணிகத்தில் அல்லாடும் மாந்தர்கள் -- எல்லாம்

புதிராக உள்ளதடி புரியாத உலகத்தில் !


பூகம்பம் உண்டாக அழிவதுவும் பெரு மளவே
ஊகமாய்ப் பலதகவல் சரியற்ற முறையினிலே -- அரசுக்கு
ஏகமாய்ப் பணம் சேரும் கோரிக்கை வைத்திடவே -- எனில்
தாகங்கூட அடங்காது பாதிப்பு கண்டவர்க்கே -- எல்லாம்

புதிராக உள்ளதடி புரியாத உலகத்தில் !


ஒப்பந்த புள்ளியுற்று பணிதனை துவங்கிடவே
நிர்பந்தம் காரணமாய் பலகோடி கைமாறாம்
இப்பந்தம் தொடர்ந்துவிட அனுபந்தம் என்னவாமோ ?
எரிப்பந்தம் வேண்டுமேயோ இவையழிந்து ஒழிந்திடவே -- எல்லாம்

புதிராக உள்ளதடி புரியாத உலகத்தில் !


களையெடுக்க நபரின்றி கொலைபுரியும் படையுண்டு -- கடல்
அலை தடுக்கும் வழியின்றி கல் மலையுடைக்க ஆள் உண்டு
விளை பெருகி நின்றாலும் விலை குறையும் நிலை அன்று
தளை கெட்டுப் போனாலும் அரங்கேறும் கவியுண்டே -- எல்லாம்

புதிராக உள்ளதடி புரியாத உலகத்தில் !

( சமூக விழிப்புணர்வுக்காய் )

எழுதியவர் : சக்கரைவாசன் (12-Jan-16, 6:41 pm)
பார்வை : 71

மேலே