செண்பகத் தாயி

வண்டார்க்கும் தேன்பூங் குழலி மனதினில்
கொண்டார்க் கருள்புரியும் ஒப்பிலா பேரெழிலி
செண்பகத் தோட்டத்தின் ஈசனிடம் சேர்தேவி
வெண்பாநன் மாலை அணி

---கவின் சாரலன்

ஈசனிடம் சேர் தேவி ---ஈசன் இடம் சேர் தேவி என்று இரண்டு பொருளிலும்
கொள்ளலாம் .
இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

காலையில் எழுந்து கதிரவனை வணங்குவது போலும் கடவுளை வணங்குவது
போலும் ஒரு அன்றாட வழக்கமாகிவிட்டது எழுத்தில் பதிவு செய்வது...

புத்தாண்டில் யாப்பு பக்தி சார் கவிதைகளே எழுத வேண்டும் என்பது
என் தீர்மானம் .

இளைஞர்கள் யாப்பு பயிலுங்கள் முயலுங்கள் . உங்களுக்கு உண்மையான
இலக்கிய கௌரவம் கிட்டும் .

வள்ளல் எழுத்து பக்கங்களை விரித்து வைத்திருக்கிறார்கள்
யாராயினும் செம்மையாகப் பயன்படுத்தி இலக்கியத்திலும் இதயத்திலும்
உயர்வு பெறுங்கள் .
யாப்பிற்கும் இறை நினைப்பிற்கும் இரண்டு விதமான கருத்தில்லை .
கருத்திடல் தேவை இல்லை . கருத்தில் வையுங்கள் போதும்
மனதில் கொண்டார்க்கு அருள் புரிவாள் செண்பகத் தாயி .

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jan-16, 10:45 am)
பார்வை : 127

மேலே