சதைப்பிண்டம்

குறுதியொத்த சதை கொண்ட
மெய்யுடையோன் நான்,

கோபத்தீயை அடுத்தவன் மீது பாய்ச்ச
தெரியாதவன்தான்.,

அப்பாவியென்ற ஒற்றை
பெயரைக்கொண்டழைபவன்.,

முகமதில் கலை இல்லா காமுகன் நான்
பழியும் வலியுமாய் கரைந்து செல்கின்றது என் வாழ்க்கை

என்னை புரிந்து கொள்ளவோ அணைத்து செல்லவோ
மயிரளவுடைய உயிரில்லை அந்த உலகிலே,

படைத்தானவன் படைப்பில் ஓராயிரம் குறையோடு
தடுக்க எவனுமில்லா துணிவோடு

சிக்கிக்கொண்டேன்  கருணையில்லா 
அண்டத்தாரோடு..


இதை அனுபவித்தே ஆக வேண்டுமென்றவன் எண்ணிணாள் 
அதைவிடுத்தொரு வழியுண்டோ எனக்கு???..

எழுதியவர் : கலீல் (13-Jan-16, 2:35 am)
சேர்த்தது : கலிலுல்லா
பார்வை : 174

மேலே