மனைவி
அன்புள்ள கணவனுக்கு.....
நான் உனக்கு அன்பான மனைவிதான்.....
உன் சுதந்திரத்தில் நான் தலையிடாமல் இருக்கும் வரை!
நான் உனக்கு அன்பான மனைவிதான்......
உனக்கு மட்டுமே நான் வேலைக்காரியாக இருக்கும் வரை!
நான் உனக்கு அன்பான மனைவிதான்.......
உன் குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை!
நான் உனக்கு அன்பான மனைவிதான்.......
நம் குழந்தைகளை நானே வளர்க்கும் வரை!
நான் உனக்கு அன்பான மனைவிதான்.......
என் விருப்பங்களை உன் மேல் திணிக்காத வரை!
நான் உனக்கு அன்பான மனைவிதான்......
உனக்காகவே வாழும் வரை!