மறுபடியும் ஒரு அலை
அடர்ந்த மேகக் கூட்டத்திடை
அழகிய ஒளிக்கீற்று
உன் கண்களிலிருந்து.
நம் ரசிப்பு வெறும் கண்கலப்புக்கு.
விருப்பு மறுத்து, நெருப்பு வளர்த்து,
நினைவு சிதைத்து, துரத்தி தொலைந்து,
பின் ஏன் இந்த மதமதப்பு.
முடிவு செய்,
வார்த்தைகளுக்கு அனுமதியில்லை.
கூடிவந்த வேலை சந்திக்க மனமில்லை.
விளக்கிசெல்ல விருப்பமுமில்லை.
பின் எதற்கு இந்த மத்தாப்பு.
கலங்கிய நிலையில்
கடல் சேர மனமில்லை.
தெளிந்த நீராய் நிலம்
குளிரத் துடிக்கிறேன்.