விடாமுயற்சியோடு தொடர்ந்து போராடு
![](https://eluthu.com/images/loading.gif)
ஆழிக் கடலின்
விரி பேரலைகள்
மிதவைகளுக்குக்
கலங்கரை விளக்கு ...
மனக்குளம் மூழ்கி
முத்து முகிழ்ந்த
சிப்பிகளும்
எண்ணச் செந்தாமரைகள்...
முத்துப் புதையல் எடுக்க
பவளப் பாறைகள்
மூழ்க மூச்சடக்கி
நாசி துலக்கு...
ஒட்டக மிதியடிகள்
கள்ளிச் சப்பாத்திகள்
சுடுமணல் சூறாவளி
நீர் குடித்து
தீக் குளித்து
வெற்றிப் பாதைகளில்
சலவைப் பளிங்குகள்
வெட்டி எடு
வேண்டியது
விடாமுயற்சி மட்டும் தான்..
தொடர்ந்து போராடு
விடாமுயற்சியோடு
மீண்டும் மீண்டுமாய்
தொடர்ந்து போராடு...!