பூமி ஆளு என் புன்னகையே

கவிதைகள்
உனக்கெனக் காத்திருக்கு
நீ
பாரதி...
காலம்
உன்னைக் காணப்
பூத்திருக்கு
நீ
வசந்தம் ...
தென்றல்
உன்னைத் திசை
விரிக்கிறது
நீ
நந்தவனம்..
அலைகள்
உன்னைத் தனக்குள்
கரைக்கிறது
நீ
பெருங்கடல்...
சிறகுகளின்
ஆகாயம்
திறந்திருக்கிறது
நீ
தேவதை...
விருட்சம் வளர்ந்த
விதை
வளர்கிறது
நீ
ஆலமரம்...
கருக் கொண்ட
பூவே...
கதிர் தந்த
நாற்றே ...
விடியல் உன்னை
வானில் விதைத்திருக்கிறது
பூமி ஆளு
புன்னகையே..
யாதும் ஊரே யாவரும் கேளிர்...!