பூத்ததை போற்றுக
பூத்ததை போற்றுக..!
பழையதை போக்கியே
புதியதை ஆக்கிநல்
புகழதை சேர்த்திட
புலர்ந்ததை வாழ்த்துக..!
பாரிதை துலக்கியே
பல்லுயிரதை பெருக்கிட
உரியதை வழங்கிடும்
கதிரதை வாழ்த்துக..!
நிலமதை மாற்றியே
நீரதைப் பாய்ச்சிட
விளைவதை தேக்கிய
காலினமதை வாழ்த்துக..!
மறையதை ஓதியே
மனமதை மீட்டிநல்
மாற்றத்தை காட்டிடும்
மனிதத்தை வாழ்த்துக..!
கனியதை கன்னலை
மலரதை மஞ்சளை
மணியதை வணங்கவே
பூத்ததை போற்றுக..!