பாடல் ---முஹம்மத் ஸர்பான்

(எவனோ ஒருவன் வாசிக்கின்றான் இருட்டிலிருந்து நான் யாசிக்கின்றேன் என்ற அலைபாயுதே திரைப்பட ராகத்தில் நான் எழுதிய பாடல் வரிகள்)

ஏனோ உள்ளம் அழுகின்றதோ
கண்ணை வெள்ளம் மூழ்கியதோ
நினைவின் மடியில் உறங்குகிறேன்
அதில் முள்ளின் கிரிடம் அணிகின்றேன்

ஏனோ உள்ளம் அழுகின்றதோ
கண்ணை வெள்ளம் மூழ்கியதோ
ஏனோ உள்ளம் அழுகின்றதோ
கண்ணை வெள்ளம் மூழ்கியதோ
நினைவின் மடியில் உறங்குகிறேன்
அதில் முள்ளின் கிரிடம் அணிகின்றேன்
தேடி தேடி நான் கலங்குகிறேன்
நெஞ்சில் நெருப்பு எரிகிறதே
பாடி பாடி நான் தேடுகிறேன் நான்
தேடும் வழியில் வான மில்லை

ஏனோ உள்ளம் அழுகின்றதோ
கண்ணை வெள்ளம் மூழ்கியதோ

உயிரே உயிரே என் உயிரே
மரணம் எமக்கு ஒரு வீடு
உயிரே உயிரே என் உயிரே
மரணம் எமக்கு ஒரு வீடு
குயிலே குயிலே கருங்குயிலே
காதல் எனக்குள் ஒரு கூடு
அலை போல் உன்னை தொட்டிடவே
என் இதய நரம்பை விற்கின்றேன்
இலை போல் உதிரும் உன் நினைவை நான்
இதய குவளையில் அள்ளுகிறேன்

ஏனோ உள்ளம் அழுகின்றதோ
கண்ணை வெள்ளம் மூழ்கியதோ

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (15-Jan-16, 1:40 am)
பார்வை : 154

மேலே