படிக்காத மேதை
பத்து மாதம் கருவறையில்
பற்றுடன் காத்த அன்னையின்
பாச உள்ளம்
பிள்ளையின் பரிதவிப்பிலெல்லாம்
தேடி தேடி ஓடியே
தேவைகள் ஈடேற்ற ஓடோடி
பாசத்தில் விளையும் புதுமைகள்
அவள் அறிவில் உதயம்
புதுமைகள். அதிலொரு தொட்டில்
தன்னை வருத்தி ஏனும்
தன் பிள்ளைக்காக யோசிக்கும்
தாயின் முன்
அறிவியல் கூட
தோற்றுத்தான் போகும்
தாய் என்பவள் ஒரு
படிக்காத மேதை