கண்டேன் எங்கும் பொங்கலைப் பலவாகு
பொங்கல் எங்கும் கண்டேன்
பால் பொங்கல் பொங்கி வழிந்து
மனம் எல்லாம் பொங்கி மகிழ்ந்து
நிலமெல்லாம் பொங்கி செழித்து
கண்டேன் எங்கும் பொங்கலைப் பலவாகு.
இயற்கையில் பொங்கும் அழகைக் கண்டேன்
கடல் பொங்கி நுரை நுரையாக வழிந்து
நிலவு பொங்கி வெள்ளி மலையாக மகிழ்ந்து
மரங்கள் பொங்கி காயும் கனியுமாக செழித்து
கண்டேன் எங்கும் பொங்கலைப் பலவாகு.
மனிதரிடம் பொங்கும் குணங்களைக் கண்டேன்
ஆனந்தத்தில் துள்ளி குதித்து பொங்கி வழிந்து
பொருள் ஈட்டலில் உழைத்து பொங்கி மகிழ்ந்து
குடும்பத்தில் பிள்ளையும் குட்டியுமாகச் செழித்து
கண்டேன் எங்கும் பொங்கலைப் பலவாகு
.