உயிராய்த் தமிழ்
தமிழ் என் றொலிக்கும் போழ்தும்
தமிழன் என் றழைக்கும் போழ்தும்
உள்ளம் நிறைந்த களிப்பும் கணம்
உள் எழும்பும் அடங்காத் திமிரும்
ஒருங்கே உனக்குள் பற்றிக் கொண்டால்
ஒருவரும் மறுக்க இயலா திதை
தமிழ் உந்தன் காதலி என்றும்
தமிழ் தான் உந்தன் உயிரென்றும்.

