தைப்பொங்கல்

தைப்பொங்கல்.....
சங்க காலத்தில் இந்திர விழாவாக அவதாரம் எடுத்து,
தைப்பொங்கலாக வலம் வந்து ,
தமிழ்ப்புத்தாண்டாய் உருமாறிக் கொண்டிருக்கும் ஓர் விழா.....

“ஹேப்பி பொங்கல்”...மலர்ச்சியாய் சிதறும் வார்த்தைகள்...
மனக்கண்ணில் நான்கு நாட்கள் விடுமுறைக்கான ஒத்திகைகள்...

பழையன கழிதலும் புதியன புகுதலும் போகியாம்.....
ஆம்....இன்றைய நிலையில் பொங்கல் சலுகையில்
எக்சேன்ஞ் ஆஃபரில் பழைய நோக்கியாவும் , சாம்சங்கும் வரிசையில்....

ஆடியில் தேடி விதைத்து ,
மண்ணை வியர்வையில் நனைத்து,
உழைத்த பெருமிதப்புடன்
சூரியனுக்குபடையலிட்டு நன்றி சொல்லும் தை நாளாம்...
சத்தமின்றி குக்கரில் மட்டும் விசிலடிக்கும் இன்றைய பொங்கல்........

தோள் கொடுத்து நண்பனாய், உழவனாய் ,
உருமாறிய ஜீவன்களை போற்றும்மாட்டுப் பொங்கல்...
மிருககாட்சிசாலையில்,பள்ளி சிறார்களுக்கு மாடுகளை பற்றிய முகவுரை , இன்று....

உறவினர்களுடன் ... களிப்புடன் கழிந்த காணும்பொங்கல்...
கண்மூடித்தனமாய்,
கரை புரண்டு ஓடும் பீர் பாட்டிலுடன்
காணமுடியா பொங்கலாய் பீச்சில் இன்று......

உழவரை மதிப்போம்..
அவர் தந்த உணவினை மதித்து நன்றி பகர்வோம்...
பாரம்பரியம் நிலைத்திருக்கட்டும்...
மனிதம் மலரட்டும்...
அறியாமை அழியட்டும்....
இன்பம் பொங்கட்டும்...
அது என்றும் தொடரட்டும்....

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்....

நட்புடன்
தீபமதி.....

எழுதியவர் : தீபமதி (18-Jan-16, 11:44 am)
சேர்த்தது : Deepamathi
பார்வை : 91

மேலே