தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து4---ப்ரியா
(முன்கதை சுருக்கம்:வசந்தின் கம்பெனியில் நுழைந்ததும் ஒரு சில விஷயங்களை தெரிந்து கொண்டாள் ரியா....தனது அடுத்த வேட்டைக்கு தயாராகிக்கொண்டிருக்க.......ப்ராஜெக்ட் முடித்துவிட்டு வசந்தும் வந்துவிடுகிறான்)
ரியா தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவள் இருக்கையில் அமர்ந்தாள்.
அவன் சில குறிப்புகளை அவளிடம் கொடுத்து சில விஷயங்களை பற்றி ரகசியமாய் பேசினான் பேசும் போது அவன் முழுக்க முழுக்க தன் நிறுவனத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தானே தவிர அவளை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கவோ பேசவோ இல்லை....கண்களில் இன்னும் நிறைய சாதிக்கணும் நம்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் தன கார் நிறுவனம் மிகப்பிரபலமானதாக இருக்க வேண்டும் என்று தனது இலட்சியத்தை வார்த்தைகளாலும் கண்களாலும் காட்டினான்..... ஆனால்......... இவளது முழு நோக்கமும் அவனின் நிறுவன ரகசியங்களை அறிவது மட்டுமேதான் அதற்காக அவனின் கருத்துக்களை ஆழ்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள்........!
கம்பெனி ரகசியம் அறிந்து கொள்வது மட்டுமல்ல தன் தோழியை ஏமாற்றியது போல் இவனையும் காதலிப்பது போல் நடித்து ஏமாற்றவேண்டும் இறுதியில் இவனது நம்பர்1 கம்பெனியும் வலுவிழந்து....பெண்களை காதல் என்ற பெயரில் மயக்கும் தனது மாய வலைக்குள் விளைவிக்கும் இவனது மனமும் வலுவிழந்து போய்விடும்.......இந்த இரண்டு விஷயத்துக்காகவே துடித்துக்கொண்டிருக்கிறாள் ரியா.......
அப்பொழுதுதான் வந்தனாவின் உண்மைக்காதல் இவனுக்கு புரியும் என ஒரு வில்லி போல் மனதுக்குள் குமுறிக்கொண்டு அனலை கண்களில் தெறித்துக்கொண்டிருந்தாள் ரியா...?
இவன் பார்க்க நல்லவன் மாதிரி இருக்கான் பண்ற வேலைகள்???ச்சே மிருகம் மனதுக்குள் என்று திட்டிக்கொண்டாள்.
வசந்தின் அறிமுகம்........
என் அப்பாதான் இந்த நிறுவனத்தை நடத்தி வந்தார் அப்போது எனக்கும் இதுக்கும் சம்மந்தமே கிடையாது பொறியியல் படிப்பு என்ற பெயரில் ஜாலியா சுற்றிக்கிட்டிருந்தேன் கம்பேனி விஷயம் பற்றி எதுவுமே தெரியாது, என் அப்பா இறக்கும் தருவாயில் சில தொழில் நுட்பங்களை கற்றுகொடுத்தாத்தார் அதை நுணுக்கமாக அறிந்து கொண்டேன் அப்பாவின் ஆசைப்படி பெரிய நிறுவனமாக மாற்ற ஆசைப்பட்டேன்,அதை மனதில் வைத்துக்கொண்டு நன்றாக படித்தேன்.......
சின்ன பொருளாக இருந்தாலும் அதை எப்படி செய்வது என்ற என்ற ஆர்வம் சிறுவயதிலிருந்தே எனக்கு உண்டு....அதுதான் எனக்கு தூண்டுகோல், தியரி படிப்பை விட செய்முறை பாடங்கள் தான் எனக்கு கைவந்த கலை அதன் காரணமாகதான் இந்த அளவுக்கு உயரத்தில் இருக்கிறேன் என்று தன் பெருமையை சொன்னான்.......!
நான் எப்போதுமே பிற நிறுவனங்கள் தயாரிக்கும் மெஷின்களிலிருந்து வித்தியாசமாகதான் செய்ய நினைப்பேன் இதுவரைக்கும் பயன்படுத்தாத புது டிசைன்களைதான் செய்வேன் அதனால் தான் வெளிநாடுகளுக்கும் நம் நிறுவனத்தின் மீது கொள்ளை மோகம், பல இடங்களில் தொடங்கியுள்ளேன் எல்லாமே நம்பர்1 ஆக செயல்பட்டு வருகிறது இன்னும் பேரெடுக்க வேண்டும் இதான் என் லட்சியம்......!
அதனால்தான் என் நிறுவனத்தை இன்னும் மேம்படுத்த சில திட்டங்களை தீட்டியுள்ளேன் அதற்காக தான் உங்களை புது அப்பாய்ன்மென்ட் பண்ணிருக்கேன் மிஸ்.ரியா........
"நீங்களும் என்கூட பக்க பலமா இருந்து எனக்கு துணை புரிவீ ங்கன்னு நம்புறேன்" என்று சொல்லிவிட்டு அவளை பார்த்தான்?????
அவள் ஒன்றும் சொல்லாமல் அப்படியே நிற்க,,,,,
என்ன!நம்பலாமா????என்றான்?
எஸ்.சார் என்று சற்று பதற்றமாக பேசினாள்.
ஓகே,ஒகே ரிலேக்ஸ் எனக்கு நம்பிக்கை இருக்குது அதனாலதான் உங்க பயோடேட்டாவை பார்த்ததுமே உங்கள தேர்ந்தெடுத்துவிட்டேன்.
புரியாமல் அவனை பார்த்தாள்.....
ம்....பேப்பரில் விளம்பரம் கொடுத்ததுமே ஏராளமான இளநிலை,முதுநிலை பொறியியலாளர்கள் மட்டுமின்றி இன்னும் நிறைய பேர் விண்ணப்பம் கொடுத்திருந்தனர்......அதில் அனைவரையும் ரிஜெக்ட் பண்ணிவிட்டு உங்களை மட்டும் செலக்ட் பண்ணிவிட்டேன் என்று பளிச்சென்று சிரித்தான்....!
ஏன் என்னை மட்டும் என்பது போல் பார்த்தாள் ரியா????
உன் பயோடேட்டாவையும் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தையும் பார்த்தேன் நீங்கதான் இதற்கு பொருத்தமானவர் என்று மனது சொல்லியது அதான் என்றான்.......
ஓகே!ரொம்ப நன்றி சார், அப்போ என்னுடைய வேலைகளை பற்றி சொல்லுங்க என்று ஆவலாய் கேட்டாள்...??,
உங்க துடுதுடுப்பும் அழகான துறுதுறு பார்வையும் புடிச்சிருக்குது ஆனால் ஏன் இந்த அவசரம் நிதானமாக செய்தால்தான் எதிலுமே வெற்றிக்கிடைக்கும்........நீங்க நம்ம நிறுவனத்தை பற்றி தெரிஞ்சிக்க இன்னும் நிறைய இருக்குது வாங்க சொல்றேன் என்று பின் பக்க தோட்டம் பக்கம் அழைத்து சென்றான்....!
நீங்க ரொம்ப நல்ல பொண்ணா இருக்கீங்க அமைதி அழகு அறிவு மரியாதை என எல்லாமே தெரிந்த குடும்ப பெண்..... நாகரீகம் தெரிந்தவர் என்பது தங்கள் பேச்சு நடை உடைகளால் அறிந்துவிட்டேன்,.......அதே போல் இங்கிருப்பவர்களைபற்றி சொல்லிவிடுகிறேன்.....வெளி பணியாட்களைப்பற்றி கவலை இல்லை ஆனால் நம் அறையோடு சேர்ந்திருக்கும் பெண்களிடமும் பார்த்து பழகுங்கள்.......அளவுக்கு மீறி அவர்களிடம் பேசவேணாம்.....தேவைக்கு ஓரிரு வார்த்தைகளோடு நிறுத்திவிடுங்கள்.......ஆள் இல்லனா இடித்து வைத்த புளி மாதிரி உக்கார்ந்து கொண்டு ஊரார் கதைகள் பேச ஆரம்பித்து விடுவார்கள்......அதனால அவர்களை கொஞ்சம் கண்டிப்போடு பார்த்து வேலை வாங்குங்கள்.......ஒன்றும் பயப்படத்தேவையில்லை எனக்கு அடுத்தபடியாக இதை நிர்வகிக்கும் அனைத்து பொறுப்பும் உங்களுக்கு உண்டு என்று சொல்லிவிட்டு அவளைப்பார்த்து கண்சிமிட்டி சிறு புன்னகை செய்தான்......
அவனது அந்த கண்களும் சிரிப்பும் இவள் இதயத்தை உரசி சென்றன......ம்ம்ம் என்ற வார்த்தையை தவிர வேறொன்றும் பேசாமல் அவன் பின்னாலேயே சென்று கொண்டிருந்தாள்.....தோட்டம் வந்தது?? வந்தனா சொன்ன விஷயங்கள் நினைவுக்கு வர பயத்தில் செய்வதறியாமல் கால்கள் பின்னிப்பிணைய......கைகள் தன்னையுமறியாமல் உதறுதல் கொடுக்க கன்னம் வியர்க்க..., நமக்கு ஏதாவது நடந்து விடுமோ?அவனை பழிவாங்கும் நோக்கத்தில் நாம்தான் மாட்டிக்கொள்ளப்போகிறோமோ?என்று எதுவும் புரியாமல் மறுப்பு சொல்லமுடியாமல் அவன் பின்னாலே சென்று கொண்டிருந்தாள்.........?
அப்பொழுது சரியாக அவள் செல்போன் ஒலித்தது எடுத்து பார்த்தால் திரையில் வந்தனா மின்னிக்கொண்டிருந்தாள்......
தொடரும்...........!