அறிவியல் தெரியுமா பெண்ணே

அறிவியல் தெரியுமா பெண்ணே?

உனது காதல்
ஆகாயம் என்றாய்!

எனதோ தாரகை என்றாய்!

அறிவியல் உண்மை தெரியுமா?
உனக்கு??

ஆகாயம் என்பது ஏது ?
அதற்க்கும் இடமுண்டோ?

வெளியை தான்
ஆகாயம் என்கிறார் சில
மடமை மனிதர்!

கோடியாய் குவிந்துள்ளன வின்மீன்கள்!

எனதே சிறந்தது பெண்ணே!!!



உனது காதல் நிலவென்றாய்!
எனதோ வையமென்றாய்!

அறிவியல் உண்மை தெரியுமா?
உனக்கு??

பூமியை விட புவியீர்ப்பில்
குறைவு தான் நிலவு!!

அதனால்தான் என்னவோ?

எனக்குள் நீ பட்டென்று
விழுந்தாய்

உனக்குள் நான் மெதுவாகத்தான்
விழுந்தேன்!



உனது காதலை நீ ஒளியென்று
சொல்லி நேர் வழியில் பயணித்தாய்!
எனது காதலை வளைவான பாதையென்று திசைகளை திருப்பினாய்!!

என்னை விட்டு நெடுந்தூரம் போக
நீ முயன்றாய்!

பாவம்!! அறிவியல் உண்மை தெரியுமா?
உனக்கு??

ஒளியும் வளைவு பாதையை
மேற்கொள்ளும் என்று!

அதனால்தான் என்னவோ?

இன்னும் வளைவு பாதைகளில்
என்னோடு நீ!!
உன்னோடு நான்!!


உனது காதலை நீ
பூமியில் வைத்தாய்!
எனதை நீ வான்மண்டலத்தில்
எறிந்தாய்!!
இறந்துபோவாய் என்று!!

அடியே அறிவியல் உண்மை தெரியுமா?
உனக்கு??

வான்மண்டலத்தில் தோலும் சுருங்குவதில்லை,வயதும்(காதலும்) சுருங்குவதில்லை!

நம் காதல் காத்திருப்பில்
நானே முதலிடம் பிடிப்பேன்!


இறுதியாய் !!
எனது காதலை பூமியில்
வைத்து,
உனதை விண்வெளியில் எறிந்தாய்!

அறிவியில் உண்மை தெரியாமலே!

மனிதர்களால் விண்வெளி
போக முடியும் பெண்ணே!

இதோ!! என் (காதல்)கா1 ராக்கெட்
பயணித்துக்கொண்டே இருக்கிறது!

விரைவில் நம் காதல் ஓர் இடத்தில்!!!

எழுதியவர் : (19-Jan-16, 12:01 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
பார்வை : 101

மேலே