மண்வாசம் - கற்குவேல் பா

சோளக்காத்து ,
கொடுத்த சுகம் ;
பீச்சுக்காத்து ,
கொடுக்கலையே !

~~*

ஆத்தா வைக்கும் ,
மீன்குழம்பு சுவை ;
புகாரி உணவகத்திலும் ,
கிடைக்கலையே !

~~*

ஸ்பரிசம் தரும் ,
வரப்புமண் வாசம் ;
ஒரு தெருவிலயும் ,
நுகரலையே !

~~*

மாட்டுவண்டி ,
பயண சுகம் ;
சொகுவண்டி ,
கொடுக்கலையே !

~~*

செம்மண் மணக்கும் ,
குளத்து நீர் சுவை ;
அக்குவாகார்டு ,
அளிக்கலையே !

~~*

வைக்கற்போரில் ,
வந்த தூக்கம் ;
பஞ்சு மெத்தையில் ,
வரலையே !

~~*

மஞ்சள் பூசும் ,
மங்கை முகம் ;
ஒன்று கூட ,
பார்க்கலையே !

~ பா .கற்குவேல்

‪#‎மறந்துபோன_கிராம_வாழ்க்கை‬

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (19-Jan-16, 2:14 pm)
பார்வை : 124

மேலே