ரௌத்திரம் பழகு - கற்குவேல் பா

கள்ளிப்பாலூட்ட
குவளையுடன் வரும்
தண்டட்டிக் கிழவியின்
காதறுத்தே - பழகு
ஒரு ரௌத்திரம் !

~~*

கல்விக்கு
முட்டுக்கட்டையிடும்
குடிகார தந்தையின்
குருதி குடித்தே - பழகு
ஒரு ரௌத்திரம் !

~~*

வேலைக்கு
செல்லும் உன்னை ,
தெருவில் நின்று
சீண்டும் நாய்களை
செருப்பால் அடித்தே - பழகு
ஒரு ரௌத்திரம் !

~~*

பயணத்தில்
கூட்ட நெரிசலில் ,
தேகமுரசும்
காமுண்டர்களின் ,
உறுப்பறுத்தெடுத்தே - பழகு
ஒரு ரௌத்திரம் !

~~*

காதல் பெயரில்
காமம் தனித்துப் போகும் ,
போலி முகவரிகளின் ,
முகத்திரை கிழித்தே - பழகு
ஒரு ரௌத்திரம் !

~~*

வீட்டோடு
முடக்க நினைக்கும்
ஆணாதிக்க சமூகத்தின்
முதுகெலும்பு உடைத்தே - பழகு
ஒரு ரௌத்திரம் !

~~*

பெண்னென்று
ஏளனம் செய்யும்
எவரொருவரையும் ,
இடுகாடு அனுப்பும்
துணிவு கொண்டே - பழகு
ஒரு ரௌத்திரம் !

~ பா . கற்குவேல்

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (19-Jan-16, 2:47 pm)
பார்வை : 1862

மேலே