மனித நேயத்தின் விலங்கு நேயம்

மனித நேயத்தின் விலங்கு நேயம்
*******************************************************
சுதந்திரமாய்த் தன் இனத்தோடு
வனத்தில் சுற்றித் திரியும் யானை
மனித நேய சமுதாயத்தில்
வாழ்நாளின் பெரும்பகுதி நேரம்
சங்கிலியால் கட்டிவைத்துக் கிடப்பது
விலங்குநேய ஆர்வலர்களுக்கு
துன்புறுத்தலாய்த் தெரியவில்லை.

யானை வீட்டு விலங்கா
வன விலங்கா என்ற ஐயம்
நம்மில் பலருக்குண்டு.

ஒரு ஆட்டத்தில் மட்டும்
சில மணி நேரம்
சட்டம் அனுமதிக்கும்
விதிப்படி பங்குகொள்ளும்
காளை மாட்டுக்கு மட்டுமேன் தடை?

பல்லாயிரம் ஆண்டுகளாய் நடக்கின்ற
பண்பாட்டுத் திருவிழாவில்
ஒரு நிகழ்வே இந்த ஜல்லிக்கட்டு
வீர விளையாட்டு!
இதுபற்றி அறியாதார் எதிர்க்கின்றார்
வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டை.

வேதிப் பொடிகளைத் தூவி
சுற்றுச் சூழலைப் பாழ்படுத்தும்
விழாவை நடத்தலாம்.

கந்தகப் புகையைக் கக்கி
பலத்த இடியோசையோடு
இயற்கைக்கும் மழலையர்க்கும்
பிணியாளருக்கும் முதியோர்க்கும்
அதிர்ச்சியையும் அச்சத்தையும்
மாரடைப்பையும் இலவசமாய்த் தரும்
பட்டாசு வெடித்தலும் சட்டப்படியான செயல்.

ஜனநாயகத்தில் கெட்டதாயிருந்தாலும்
பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டால்
நல்லதாய் உருமாறி சட்டமாகிவிடும்
யானையும் வீட்டு விலங்காகிவிடும்.

================================================
கேரளா-மதம் பிடித்த கோவில் யானை மிதித்து பெண் உள்பட 3 பேர் பலி திருச்சூர்:
திருச்சூர் அருகே நடந்த கோயில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்தது. அது தாக்கி மிதித்ததில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
===================

தமிழ்.ஒன்இந்தியா.காம்
Thursday Arpril 24, 2008. 10.25.

எழுதியவர் : மலர் (19-Jan-16, 3:46 pm)
பார்வை : 429

மேலே