கண்காட்சி
கண்காட்சி
- - - - - - - - - - -
வானிற்கு கடல்
பூமிக்கு கதிரவன்
வண்டுக்கு பூக்கள்
வானரத்திற்கு வனம்
இரவுக்கு நிலா
இருப்புக்கு காற்று ......
மாணவனுக்கு கீழ்ப்பணிவு
மனையாளுக்கு நற்பேச்சு
கல்விக்கு நற் பண்பு
காதலுக்கு மரியாதை ......
மளிகைக் கடை அம்மாவிற்கு
பொம்மைக் கடை குழந்தைகளுக்கு
பொரியல்கடை நட்புக்களுக்கு
திருவிழாக்கள் காதலர்களுக்கு .....
விந்தையுலகு விஞ்ஞானிகளுக்கு
சிந்தனைகள் எழுத்தாளனுக்கு
கற்பனைகள் கவிஞனுக்கு
நிற்பதே நிறைந்த கண்காட்சி !
- பிரியத்தமிழ் : உதயா விவேக் -