இதுதான் காதல் என்பதோ

இதுதான் காதல் என்பதோ ?
வெள்ளி நிலவொன்று கண்டேன் !
கொள்ளை அழகென்று புகழ்ந்தேன்
கள்ளமில் கன்னியைக் கண்டேன்
வெள்ளி நிலவினையே மறந்தேன்!
வெள்ளி கொலுசொன்று கண்டேன்
இனிய ஓசைதனை நான் கேட்டேன்
தண்டைக் காலழகைக் கண்டேன்
தகுமோ இணை கொலுசென்றேன்!
புள்ளி மயிலொன்று ஆடக்கண்டேன்
புளகாங்கித மாகி பூரித்து போனேன்
புள்ளி கோலமொன்று இட்டாள் !
புள்ளிமயிலே தோற்ற தென்றேன்!
மானொன்று மிரளவே கண்டேன்
மிரளாதே யெனஆரத் தழுவினேன்
மானென மருண்டு நின்றாள் !
மயங்கித்தான் மருண்டு நின்றேன்!
குயிலதின் கூவல் கேட்டேன்
கேட்கவே காதுக்கினி தென்றேன்
குயிலாக பண்—பாடி வந்தாள்
கூவல் தோற்குதே என்றேன்
எழில் ஏந்திழையாளின் முன்னர்
இயற்கையின் படைப்பு களெலாம்
எம்மாத்திரம் என்றே இயம்பினேன்!
இதன்பேர்தான் காதல் என்பதோ ?
---- கே. அசோகன்.