என்றும் என் அன்னை
கதிகாலங்களை
மதியால் விரட்டி
உயிரால் எ(ன்)னை
உருக்கி எடுத்தவள்
இமை போன்றிருந்தும்
எ(ன்)னை
இமயமலை வரை
உயர்த்தியவள்
ஆயிரம் ஜென்மங்கள் எடுத்தாலும்
நீ செய்த தவங்களும்
அர்ப்பணமும் தீருமா
அன்பு கொண்டு
அம்மா என்றழைத்தால்
இன்பமாய் எ(ன்)னைக் கண்டு🏬
துன்பம் தீர்க்க வருவாய்
தோளில் சாய்ந்து தூங்குகிறேன்
என்னுயிர் காத்தவளிடம்
தள்ளிநின்று பார்க்கையில்
துள்ளிவந்துவிடுவேன்
உன் அன்பைப் பெற........!
கவிஞர் அஜ்மல்கான்
-பசறிச்சேனை பாெத்துவில்-