பூலோகத்தில் ஒரு சொர்க்கம்
களங்கமில்லா நிறைமதி யொன்று
கவலைகள் தடுக்கும் கரங்களிரண்டு
அன்பென்ற தென்றலுடன் பாசமழைபொழிய..
கருணைக் கடலழகை களங்காமல் ரசித்தபடி
மலரின்மேல் பனித்துளியாய் மதிமயங்கி சாய்ந்தபடி
இன்பம் துன்பம் பேதமின்றி நாம்வாழ..
பூலோகத்தில் ஒரு சொர்க்கம் -அன்னைமடி
-மூர்த்தி
[ நீங்கள் விரும்பினால் அன்னைமடிக்குப் பதிலாய் அவளின்மடி (அ) அவனின்மடியென மாற்றிப் படிங்களேன்.. பிள்ளைகளின் மடியும் அன்னைக்கு சொர்க்கம்தானே..! ]