இல்லை உண்டு என்பவர் சிந்தனைக் குழப்பங்கள் என்றும் அழியாத சிக்கலே - - -- சக்கரைவாசன்

" இல்லை " " உண்டு " என்பவர் சிந்தனைக் குழப்பங்கள் என்றும் அழியாத சிக்கலே
*******************************************************************************************************************************
" இல்லை " "உண்டு " என்பவர் எதிர்வாது செய் திடற்க் (கு)
இன்னும் அயர்ந்திலர் என்னதான் உண்மையோ ?
தொல்லையாய் இதுவரைத் தோற்கவோ வெல்லவோ
துணியாது உளைத்திடும் புதிருக்கு விடையுண்டோ ?

சிந்தைக் குழப்பங்கள் விந்தைபல புரிந்திட
சித்தாந்த முடிவுகள் மனம் ஏற்க மறுத்திட
அந்தம் நெருங்கிடும் அந்தநாள் மட்டிலும்
வந்துறும் சர்ச்சைகள் அழியாத சிக்கலே !

எழுதியவர் : சக்கரைவாசன் (22-Jan-16, 9:34 pm)
பார்வை : 90

மேலே